காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதுநடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு
காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதுநடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு
காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதுநடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

மதுரை:ராஜிவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட, தமிழக சட்டசபைத் தீர்மானத்திற்கு எதிராகப் பேசிய காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது நடவடிக்கை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது.மதுரை ஐகோர்ட் கிளை வழக்கறிஞர் கே.நீலமேகம் தாக்கல் செய்த மனு:
மூவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி, தமிழக சட்டசபையில், ஆக., 30ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, இண்டர்நெட்டில் டிவிட்டர்.காம் மற்றும் பேஸ் புக்கில், சட்டசபைத் தீர்மானத்தை விமர்சித்துள்ளார். ராஜிவ் கொலையாளிகள் தண்டனையைக் குறைக்க, தமிழக சட்டசபையில் வலியுறுத்தியது போல, காஷ்மீர் சட்டசபையில், அப்சல் குரு தண்டனையைக் குறைக்கத் தீர்மானம் நிறைவேற்றினால், அங்கு கட்சிகள் சும்மா இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.


