தி.மு.க., ஆட்சியில் தான் நிலங்கள் அபகரிப்பு
தி.மு.க., ஆட்சியில் தான் நிலங்கள் அபகரிப்பு
தி.மு.க., ஆட்சியில் தான் நிலங்கள் அபகரிப்பு
ADDED : ஜூலை 23, 2011 12:08 AM

சென்னை : ''தி.மு.க., ஆட்சியில் தான் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு, நிலங்கள் அபகரிக்கப்பட்டன,'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து சில கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் முதல்வரிடம் வழங்கியுள்ளோம். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி, அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக இருந்தது.
கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் தான், எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு நில அபகரிப்பு நடந்துள்ளது. 2,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.
இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். முத்துக்குமரன் பரிந்துரைகளை அமல் செய்ய வேண்டும். உள்ளாட்சிகளுக்கு தலைவரை நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். தொழிலாளர்கள் பிரச்னைகளைத் தீர்க்க, தொழிற்சங்க அங்கீகார சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.