ADDED : ஜூலை 27, 2011 01:23 AM
கொடைக்கானல்:நில அபகரிப்பு வழக்கில் கைதான, கொடைக்கானல் நகராட்சி தலைவர் முகமது இப்ராகிமுக்கு (தி.மு.க.,), காவல் நீடிக்கப்பட்டுள்ளது.கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஷன்.
இவர் பராமரித்து வரும் நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை அபகரிக்க துணை போனதாக, முகமது இப்ராகிம், கடந்த 12 ம் தேதி கைது செய்யப்பட்டார். மதுரை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, நேற்று கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆக., 9 ம் தேதி வரை காவலை நீடித்து, மாஜிஸ்திரேட் மூர்த்தி உத்தரவிட்டார்.