ADDED : ஜூலை 13, 2011 01:03 AM
சென்னை: சேலத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் செல்வராஜ், 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற சினிமா பட வினியோகம் தொடர்பாக, தன்னை அறையில் அடைத்து வைத்து மிரட்டி பணம் பறித்ததாக சன் பிக்சர்ஸ் மற்றும் சன், 'டிவி' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது, கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்படி, செல்வராஜிடம், 82 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக சன், 'டிவி' குழும நிர்வாக இயக்குனர் கலாநிதியை இன்று (13ம் தேதி) காலை 10 மணிக்கு கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகும்படி கே.கே.நகர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.