ADDED : செப் 10, 2011 01:28 AM
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கன்னிகாபுரி கடற்கரை அருகே நேற்று இரண்டு வயதுடைய இரண்டு டன் எடையுள்ள, திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
10.5 மீட்டர் நீளம், ஐந்து மீட்டர் அகலம் இருந்தது. உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரன் கூறியதாவது: இது பலத்த காயமடைந்து 25 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம். பாறையில் மோதியோ, கப்பலின் 'புரொப்பல்லர்' தாக்கியோ இறந்திருக்கக்கூடும், என்றார்.