/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சியில் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மகிழ்ச்சிகாஞ்சியில் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மகிழ்ச்சி
காஞ்சியில் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மகிழ்ச்சி
காஞ்சியில் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மகிழ்ச்சி
காஞ்சியில் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மகிழ்ச்சி
ADDED : ஆக 22, 2011 02:19 AM
காஞ்சிபுரம் : நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக, காஞ்சிபுரத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்படுவது, காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் நில மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக, கடந்த மாதம் முதல்வர் உத்தரவின் பேரில், தனி போலீஸ் பிரிவு துவக்கப்பட்டது. இப்பிரிவில், புகார் மனுக்கள் குவிந்தபடி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், புகார் மனுக்களின் எண்ணிக் கை, 700ஐ தாண்டி விட்டன. காஞ்சிபுரம் மாவ ட்ட குற்றப்பிரிவு போலீசார், நில மோசடி தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.இவ்வழக்கில் கைது செய்யப்படுவோரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு செல்ல வேண்டியிருந்ததால், போலீசார் சிரமப்பட்டனர். இச்சூழலில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், மாவட்டங்களில் பதிவு செய்யப்படும், நில மோசடி மற்றும் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, காஞ்சிபுரத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்படும், என, தமிழக அரசு அறிவித்தது.காஞ்சிபுரத்தில் ஜே. எம்., முதல் வகுப்பு கோர்ட் அருகில், சிறப்பு கோர்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்படுவது, போலீசார் மற்றும் வழக்கறிஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜான் கூறியதாவது:நில மோசடி மற்றும் அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, காஞ்சிபுரத்தில் சிறப்பு கோர்ட் அமைத்து உத்தரவிட்ட, தமிழக முதல்வருக்கும், ஐகோர்ட் நீதிபதிகளுக்கும், காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். காஞ்சிபுரத்தில் சிறப்பு கோர்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு ஜான் தெரிவித்தார்.
ம.அறம்வளர்த்தநாதன்