/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அரசு போக்குவரத்து கிளைகளுக்குள் தகராறு கோவில்பட்டியில் போக்குவரத்து பாதிப்புஅரசு போக்குவரத்து கிளைகளுக்குள் தகராறு கோவில்பட்டியில் போக்குவரத்து பாதிப்பு
அரசு போக்குவரத்து கிளைகளுக்குள் தகராறு கோவில்பட்டியில் போக்குவரத்து பாதிப்பு
அரசு போக்குவரத்து கிளைகளுக்குள் தகராறு கோவில்பட்டியில் போக்குவரத்து பாதிப்பு
அரசு போக்குவரத்து கிளைகளுக்குள் தகராறு கோவில்பட்டியில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 17, 2011 02:34 AM
கோவில்பட்டி : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சாத்தூர் மற்றும் கோவில்பட்டி கிளைகளுக்குள் ஏற்பட்ட தகராறால் கோவில்பட்டியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்டது கோவில்பட்டி கிளை ஆகும். விருதுநகர் கோட்டத்திற்குட்பட்டது சாத்தூர் கிளை ஆகும். கோவில்பட்டி கிளையில் இருந்து சாத்தூர், இருக்கன்குடிக்கு ஸ்பெஷல் பஸ் இயக்க சாத்தூர் கிளை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காமநாயக்கன்பட்டி பரலோகமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மற்றும் சாத்தூர் கிளையில் இருந்து கோவில்பட்டி வழியாக காமநாயக்கன்பட்டிக்கு ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படுவதை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தடுத்தனர். எனவே இருகிளை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மேற்கு போலீஸ் ஸ்டேசன் போலீசார் பிரச்னையை சமாதானம் செய்து வைத்தனர். இதனால் இருக்கன்குடி மற்றும் காமநாயக்கன்பட்டி செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.