/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கூட்டுறவு வங்கிகளில் உர விற்பனை தொடர்பான கருத்தரங்குகூட்டுறவு வங்கிகளில் உர விற்பனை தொடர்பான கருத்தரங்கு
கூட்டுறவு வங்கிகளில் உர விற்பனை தொடர்பான கருத்தரங்கு
கூட்டுறவு வங்கிகளில் உர விற்பனை தொடர்பான கருத்தரங்கு
கூட்டுறவு வங்கிகளில் உர விற்பனை தொடர்பான கருத்தரங்கு
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கூட்டுறவு வங்கிகளில் உர விற்பனை தொடர்பான கருத்தரங்கு நடந்தது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த கருத்தரங்கிற்கு கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் மலர்விழி தலைமை தாங்கினார்.
இப்கோ கள அலுவலர் உலகசந்தரம் வரவேற்றார். துணை பொது மேலாளர் கிருஷ்ணன், விற்பனை மேலாளர் கிருஷ் ணன், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர்கள் செல்வராஜா, சந்தானகிருஷ்ணன், அழகேசன், நடுகாட்டுராஜா, வேளாண் உதவி இயக்குனர் சங்கர் முன்னிலை வகித்தனர். இப்கோ கிசான் சஞ்சார் மாநில மேலாளர் ஜின்னா கருத்துரை வழங்கி பேசியதாவது: இப்கோ கிரீன் சிம்கார்டு மூலம் கட்டணமின்றி எம்.எஸ்.சவாமிநாதன் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு விவசாயம் சார்ந்த விபரங்களை அறியலாம். இத்திட்டத்தில் நவீன விவசாயம் சார்ந்த மற்றும் இதர விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மண் பரிசோதனை, நீர்சேமிப்பு, உரங்கள், விதை, பூச்சி மருந்து இருப்பு விபரங்கள் எளிதில் விவசாயிகள் அறியும் விதத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் தொடுதிரை கம்ப்யூட்டர் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு ஜின்னா தெரிவித்தார்.இப்கோ நிறுவனத்தால் வழங்கப்படும் உரங்கள் பற்றியும், பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. கூட்டுறவுத் துறை அலுவலர்கள் சங்க செயலர்கள் பலர் கலந்து கொண்டனர். தனி அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.