கடலூர் பள்ளியில் கண்காட்சி துவக்கம்
கடலூர் பள்ளியில் கண்காட்சி துவக்கம்
கடலூர் பள்ளியில் கண்காட்சி துவக்கம்
ADDED : ஜூலை 16, 2011 02:22 AM
கடலூர்:கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாள் கண்காட்சி
நேற்று (15ம் தேதி) துவங்கியது.கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில்
காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி மாணவிகளுக்கு போட்டிகள் மற்றும் கலை
நிகழ்ச்சிகள் நடந்தது.
பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு
பரிசு வழங்கப்பட்டது.தொடர்ந்து பள்ளி சார்பில் தமிழ்த் துறை உள்ளிட்ட
அனைத்து துறைகளின் மாணவர்கள் படைப்புகள் கொண்ட இரண்டு நாள் கண்காட்சி பள்ளி
வளாகத்தில் உள்ள அரங்கில் துவங்கியது.பள்ளி தலைமை ஆசிரியர் எர்மினி
இக்னோஷியஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்சி பள்ளியை தனம் அடிகளார்
துவக்கி வைத்தார், சிறியபுஷ்பம் உட்பட ஆசிரியைகள்
பங்கேற்றனர்.கண்காட்சியில் 200 மாணவிகள் பங்கேற்று தங்கள் படைப்புகளை
காட்சிக்கு வைத்திருந்தனர். பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.இதைத்தொடர்ந்து
கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலை பள்ளியிலிருந்து
புறப்பட்டு, பாரதிரோடு, புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக பள்ளியை
வந்தடைந்தது.