/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/பொதுப்பிரச்னை மனுக்கள் அனுப்பலாம்: கலெக்டர்பொதுப்பிரச்னை மனுக்கள் அனுப்பலாம்: கலெக்டர்
பொதுப்பிரச்னை மனுக்கள் அனுப்பலாம்: கலெக்டர்
பொதுப்பிரச்னை மனுக்கள் அனுப்பலாம்: கலெக்டர்
பொதுப்பிரச்னை மனுக்கள் அனுப்பலாம்: கலெக்டர்
ADDED : ஜூலை 14, 2011 11:48 PM
புதுக்கோட்டை: தமிழக சட்டசபை மனுக்கள் குழுவிடம் பொதுப்பிரச்சனை குறித்து மனு கொடுக்க விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மனுக்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
புதுகை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டசபை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் விரைவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்குழுவிடம் அரசுத்துறை அலுவலகங்கள் மூலம் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பொதுப்பிரச்சனை குறித்து மனுக்கள் கொடுக்கலாம். இதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் மனுக்கள் குழு புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தின்போது தொடர்புடைய அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்த உண்மை நிலையை கேட்டறிந்து மனுதாரர்களுக்கு பதிலளிக்க உள்ளது. எனவே, மனு அனுப்ப விரும்புவோர் கையொப்பமிட்ட மனுவை ஐந்து நகல் எடுத்து தலைவர், தமிழக சட்டசபை மனுக்கள் குழு, சென்னை - 9 என்ற முகவரிக்கு வரும் 25ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.