/உள்ளூர் செய்திகள்/கரூர்/63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு
63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு
63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு
63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 17, 2011 02:11 AM
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று 63 நாயன்மார்கள் சிறப்பு வழிபாடு, திருகல்யாண உற்சவம் நடந்தது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சிவனடியார் திருக்கூட்டம் 18ம் ஆண்டு விழா மற்றும் 63 நாயன்மார்கள் 17ம் ஆண்டு உற்சவம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலையில் 63 நாயன்மார்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் எனும் ஆனிலையப்பர், கிருபாநாயகி எனும் அலங்காரவள்ளி டிவுடையாள் எனும் சவுந்தர்யநாயகி திருகல்யாண உற்சவம் நடந்தது. அதன் பின் நேற்று மாலையில் பஞ்ச மூர்த்தி, 63 நாயன்மார்கள் திருவீதி உலா சிறப்பாக நடந்தது. நூற்று கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பசுபதீஸ்வரர் அலங்கார வள்ளியை வழிபட்டனர்.