/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வுஅரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வு
அரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வு
அரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வு
அரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வு
ADDED : ஜூலை 30, 2011 01:25 AM
கோவை : அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்துத்தேர்வில், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கோவை கலெக்டர் கருணாகரன் அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள், இன்று கோவையில் நடக்கிறது. கோவை மாவட்டத்தில், கோவை நகரில் 41 தேர்வு மையங்களிலும், பொள்ளாச்சி நகரில் 5 மையங்களிலும் ஆக மொத்தம் 46 தேர்வு மையங்கள் நடக்கவுள்ளன. இதில் 20 ஆயிரத்து 627 பேர், இந்தத் தேர்வினை எழுதவுள்ளனர். அனைத்துத் தேர்வு மையங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் எதிர்காலத்தில் அரசுத் தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவதோடு, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.