ADDED : ஆக 23, 2011 11:27 PM
திருப்பூர் : திருப்பூர் வித்யா மத்திர் மெட்ரிக் பள்ளியில் கோகுலாஷ்டமி
விழா கொண்டாடப்பட்டது.
50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கிருஷ்ணர், ராதை
வேடமணிந்து வந்திருந்தனர். அனைத்து மாணவர்களும் பங்கேற்ற உறியடித்தல்
போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தாளாளர்
ஜெயந்திமாலா, பள்ளி முதல்வர் ஸ்ரீனிவாசன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்,
பெற்றோர் பங்கேற்றனர். * கொடுவாய் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் நடந்த கோகுலாஷ்டமி விழாவுக்கு தாளாளர் பாலசுந்தரம்
தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் காளிதாஸ் வரவேற்றார். கோவை ராமகிருஷ்ண
மிஷன் சுவாமி ஹரிவிரதமானந்தர் சிறப்புரை வழங்கினார். பள்ளி மாணவர்களின்
மாறுவேட போட்டி நடந்தது. பள்ளி துணை முதல்வர் ஜெயபால், ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.