/உள்ளூர் செய்திகள்/சென்னை/காலியாக இருக்கும் 150 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்குமா?காலியாக இருக்கும் 150 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்குமா?
காலியாக இருக்கும் 150 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்குமா?
காலியாக இருக்கும் 150 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்குமா?
காலியாக இருக்கும் 150 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்குமா?
ADDED : ஆக 21, 2011 02:27 AM
சென்னை : தமிழகம் முழுவதும் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் 150க்கும் மேற்பட்ட அரசு உதவி வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால், முக்கிய வழக்குகள் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.நிலமோசடி புகார்களை விசாரிக்க, தமிழக அரசு, தனி போலீஸ் பிரிவு துவக்கி யுள்ளது.பொதுமக்கள் கூறும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட முக்கிய வி.ஐ.பி., களை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல் குற்றங்கள் தொடர்பான பல வழக்குகள், தமிழகம் முழுவதும் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் நடந்து வருகின்றன. ஆனால், தற்போது 100க்கும் மேற்பட்ட அரசு உதவி வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால், நிலஅபகரிப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை, கோர்ட்டுகளில் சரியாக எடுத்து வைக்க முடியாத நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் குற்ற வழக்கு தொடர்பு துறையின் கீழ், 340 அரசு உதவி வழக்கறிஞர்கள் பணியிடங்கள் உள்ளன. தென் சென்னையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் 11வது, 4வது கோர்ட்டுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த கோர்ட்டுகளில் கடந்த 5 மாதங்களாக அரசு உதவி வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். சில கோர்ட்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நடக்கும் போது, அவ்வழக்குகளை நடத்த இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நில அபகரிப்பு மோசடி வழக்கு நடக்கும் கோர்ட்டுகளில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் அவ்வழக்குகளை நடத்துவதிலும் போலீசாருக்கு சிக்கலாக உள்ளது.இதற்கிடையில், பொது நல வழக்கு ஒன்றில், குற்றவழக்கு தொடர்பு துறை இயக்குனர் பதவிக்கு போலீஸ் ஐ.ஜி.,யை நியமிக்கக் கூடாது என, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனால், தற்போது குற்ற வழக்கு தொடர்பு துறை இயக்குனர் பொறுப்பை அரசு இணை செயலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் கவனித்து வருகிறார். மேலும், ஒரு இணை இயக்குனர் மற்றும் 13 துணை இயக்குனர்களின் பதவிகளும் காலியாக உள்ளன. குற்றவழக்கு தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எஸ்.சிந்தாஞானராஜ்


