Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்

இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்

இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்

இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்

ADDED : செப் 27, 2011 09:36 PM


Google News

திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் முடிய இரண்டு நாட்கள் உள்ள நிலையில், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 3846 பதவிகளுக்கு 7092 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 4431 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திண்டுக்கல்: நகராட்சி தலைவர் பதவிக்கு செல்வராகவன் (ம.தி.மு.க., ), கவுன்சிலர் பதவிக்கு 61 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். திண்டுக்கல் ஒன்றியத்தில், ஒன்றிய கவுன்சிலர்- 17, ஊராட்சி தலைவர்-27, வார்டு உறுப்பினர்-279 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். பழநி: நகராட்சி தலைவர் பதவிக்கு மகுடீஸ்வரன் (அ.தி.மு.க.,), செந்தில்செல்வி (ம.தி.மு.க.,) மனுத்தாக்கல் செய்தனர். கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ஆயக்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு நான்கு பேரும், கவுன்சிலருக்கு ஐந்து பேரும் மனுசெய்தனர். கீரனூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு ஐந்து பேரும், நெய்காரப்பட்டி பேரூராட்சியில் தலைவருக்கு இருவரும், கவுன்சிலருக்கு எட்டு பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

பாலசமுத்திரம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு மூவரும், கவுன்சிலருக்கு எட்டு பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.



பழநி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர்-1, ஒன்றிய கவுன்சிலர்-18, ஊராட்சி தலைவர் - 38, வார்டு உறுப்பினருக்கு 278 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். கொடைக்கானல்: நகராட்சி தலைவருக்கு கோவிந்தன்(அ.தி.மு.க.,), வெங்கடேசன் (பா.ஜ.,) ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். வத்தலக்குண்டு: மாவட்ட கவுன்சிலர்-1, ஒன்றிய கவுன்சிலர்-17, ஊராட்சி தலைவர் -21, வார்டு உறுப்பினர்-150 பேர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு ஏழு பேரும், பட்டிவீரன்பட்டி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு 10 பேரும், அய்யம்பாளையம் பேரூராட்சிக்கு தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும் சேவுகம்பட்டி பேரூராட்சி கவுன்சிலருக்கு 17 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.



நிலக்கோட்டை: பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு 10 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

மாவட்ட கவுன்சிலர்-3, ஒன்றிய கவுன்சிலர்- 29, ஊராட்சி தலைவர்-41, வார்டு உறுப்பினர்-168. சாணார்பட்டி: மாவட்ட கவுன்சிலர்- 3, ஒன்றிய கவுன்சிலர்-45 ஊராட்சி தலைவர்- 52, வார்டு உறுப்பினர் -272 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். ஒட்டன்சத்திரம்: நகராட்சி தலைவர் பதவிக்கு கண்ணன் (தி.மு.க.,) மற்றும் சுயேச்சை ஒருவரும், கவுன்சிலருக்கு 22 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர்- 2, ஒன்றிய கவுன்சிலர்-16, ஊராட்சி தலைவர் -34, வார்டு உறுப்பினர்-236.



ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவருக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு ஏழு பேரும் மனுத்தாக்கல் செய்தனர். வேடசந்தூர்: பேரூராட்சி கவுன்சிலருக்கு 13 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர்-1, ஒன்றிய கவுன்சிலர்-22, ஊராட்சி தலைவர்-67, வார்டு உறுப்பினர்-227. வடமதுரை: ஒன்றிய கவுன்சிலர்-13, ஊராட்சி தலைவர்-24, வார்டு உறுப்பினர்-190. வடமதுரை பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு 18 பேரும், அய்யலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு 12 பேரும், எரியோடு பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு நால்வரும் மனுத்தாக்கல் செய்தனர். ஆத்தூர்: மாவட்ட கவுன்சிலர்-4, ஒன்றிய கவுன்சிலர்-19, ஊராட்சி தலைவர்-54, வார்டு உறுப்பினர்-289. சின்னாளபட்டி பேரூராட்சி தலைவருக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு நால்வரும் மனுத்தாக்கல் செய்தனர். குஜிலியம்பாறை: ஒன்றிய கவுன்சிலர்-12, ஊராட்சி தலைவர்-34, வார்டு உறுப்பினர்-162. பாளையம் பேரூராட்சி தலைவருக்கு இருவரும், கவுன்சிலர் பதவிக்கு 19 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us