Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/"முன்மாதிரி வார்டாக மாற்றி காட்டுவேன்' :35 வது அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

"முன்மாதிரி வார்டாக மாற்றி காட்டுவேன்' :35 வது அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

"முன்மாதிரி வார்டாக மாற்றி காட்டுவேன்' :35 வது அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

"முன்மாதிரி வார்டாக மாற்றி காட்டுவேன்' :35 வது அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

ADDED : அக் 04, 2011 01:07 AM


Google News
சேலம்: ''சேலம் மாநகராட்சி, 35வது வார்டில் வெற்றி பெற்றால், முன்மாதிரி வார்டாக மாற்றி காட்டுவேன்,'' என்று அ.தி.மு.க., வேட்பாளர் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி, 35வது வார்டு அ.தி.மு.க., வேட்பார் கோகிலவாணி(44). சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் செல்வராஜின் மனைவி. கோகிலவாணி கடந்த 1989 முதல் அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், 35வது வார்டில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது கணவர் செல்வராஜ், 1972 ம் ஆண்டு முதல் அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினராகவும், இவர் சகோதரர் கனகராஜ், 1972 முதல் வார்டு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 1996-2001 வரை செல்வராஜ், 35வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். 2001-06 வரை மீண்டும் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செல்வராஜ் கவுன்சிலராக பதவி வகித்த போது, வார்டுகளில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்துள்ளார். அதுவே அவருக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி 35வது வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும், மின்சார கம்பங்கள் பொறுத்தப்பட்டுள்ளது. திப்புநகர் ரயில்வே லைன் தெற்கு பகுதியில் கான்கிரீட் ரோடு, மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாலாஜிநகர், குமரன் தெரு, பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளை உயர்த்தி, ரோடு வசதி, சாக்கடை வசதிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ராஜகணபதி தெரு, ஜோதி கிழக்கு தெரு ஆகியவற்றை இணைக்கும் ரோடு அகல்படுத்தப்பட்டுள்ளது. சீரான குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுத்தெரு 2, புதுத்தெரு 3 ஆகிய பகுதிகளில் தாழ்வான பகுதிகள் உயர்த்தப்பட்டது. பொன்னம்மாப்பேட்டை, கார்பöட் தெருவில் உள்ளவர்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஜோதி மேற்கு தெருவில், கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஜோதி மெயின் ரோட்டில் சாலை வசதி மேற்கொள்ளப்பட்டது. அவ்வை தெரு, தேவாங்கர் தெரு, நவாப்நகர், சாலை குட்டை தெரு, அங்கம்மாள் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. கோகிலவாணி வரும் தேர்தலில் வெற்றி பெற்றால், 35வது வார்டை முன்மாதிரி வார்டாக மாற்றி காட்டுவேன், என்று உறுதியளித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us