/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாக்காளர் பட்டியல் குளறுபடி: இரண்டு கிராம மக்கள் ஆவேசம்வாக்காளர் பட்டியல் குளறுபடி: இரண்டு கிராம மக்கள் ஆவேசம்
வாக்காளர் பட்டியல் குளறுபடி: இரண்டு கிராம மக்கள் ஆவேசம்
வாக்காளர் பட்டியல் குளறுபடி: இரண்டு கிராம மக்கள் ஆவேசம்
வாக்காளர் பட்டியல் குளறுபடி: இரண்டு கிராம மக்கள் ஆவேசம்
ADDED : செப் 21, 2011 11:07 PM
சிறுபாக்கம்:சிறுபாக்கத்தை அடுத்த விநாயகநந்தல் ஊராட்சியைச் சேர்ந்த துணை
கிராமமான கச்சிமயிலூரில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தின் வாக்காளர் பட்டியல் உள்ளாட்சித் தேர்தலையொட்டி
வெளியிடப்பட்டது.இதில் கச்சிமயிலூரைச் சேர்ந்த 4வது வார்டு வாக்காளர்கள்
விநாயகநந்தல் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால் கச்சிமயிலூர்
வாக்காளர்கள் 5 கி.மீ., தொலைவில் உள்ள விநாயகநந்தல் சென்று ஓட்டளிக்க
வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆவேசமடைந்த கச்சிமயிலூர் கிராம மக்கள் 200 பேர் மங்களூர் ஊராட்சி
ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர். வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள
குளறுபடி குறித்தும், 5 கி.மீ., தூரம் சென்று ஓட்டளிக்கும் நிலை குறித்தும்
அதிகாரிகளிடம் முறையிட்டனர்.தகுந்த நடவடிக்கை எடுத்து பழைய வாக்காளர்
பட்டியலில் உள்ளவாறு திருத்தம் செய்யாவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை
புறக்கணிக்கப் போவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அதேப்போன்று
சிறுபாக்கம் அடுத்த ரெட்டாக்குறிச்சி ஊராட்சியில் இரு பிரிவைச் சேர்ந்த
மக்கள் வசித்து வருகின்றனர். புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில்
இரு பிரிவைச் சேர்ந்த 250 வாக்காளர்களின் பெயர்கள் பிரிவுகள் மாறி வெவ்வேறு
வார்டுகளில் இடம் பெற்றுள்ளது.இதனால் வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர்
பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கும் பழையபடி வாக்காளர் பட்டியல் மாற்றித்தர வேண்டும் என மங்களூர்
ஊராட்சிய ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதிகாரிகளின் சமாதானத்தை
ஏற்று ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.