Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அரசினர் ஐடிஐ.,யில் புதிய தொழிற்பிரிவு காலியிடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை

அரசினர் ஐடிஐ.,யில் புதிய தொழிற்பிரிவு காலியிடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை

அரசினர் ஐடிஐ.,யில் புதிய தொழிற்பிரிவு காலியிடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை

அரசினர் ஐடிஐ.,யில் புதிய தொழிற்பிரிவு காலியிடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை

ADDED : செப் 14, 2011 12:03 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி அரசினர் ஐடிஐ.,யில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்டுமான தொழிற்பிரிவில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இது குறித்து வேவைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது;தூத்துக்குடியில் உள்ள அரசினர் ஐடிஐ.,யில் இந்தாண்டு முதல் கட்டுமானம்(பொருத்துனர் மற்றும் பற்றவைப்பவர்) என்ற புதிய தொழிற்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வருடத்தில் அடிப்படை பயிற்சியும், இரண்டாம் வருடத்தில் முதல் ஆறு மாதத்தில் முன்னேற்ற பயிற்சியும், அடுத்த ஆறு மாதத்தில் அருகிலுள்ள பெரிய தொழிற்சாலைகளில் அப்பிரன்டிஸ் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்பிரிவில் சேர்வதற்கு கல்விக்கட்டணம் ஏதுமில்லை. மேலும் பயிற்சி காலம் முழுவதும் மாணவர்களுக்கு இலவச பஸ், ஸ்காலர்ஷிப் ஆகியவை வழங்கப்படும். மேலும் விவசாய குடும்பத்தை சார்ந்தவராயின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் நிதியுதவியும், சிறுபான்மை இனத்தவராயின் அதற்குரிய நிதியுதவியும் வழங்கப்படும். இந்த பிரிவில் படிக்கின்ற மாணவர்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த பிரிவில் நிறைய காலியிடங்கள் உள்ளது. எனவே விருப்பம் உள்ள மாணவர்கள் ஐடிஐ., முதல்வரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us