ADDED : செப் 14, 2011 12:01 AM
ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி மடிகிஜேலா மண்டேலா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 1996ம் ஆண்டு இவர்கள் விவாகரத்து மூலம் பிரிந்த போதிலும், சமீபகாலமாக, மண்டேலாவின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.