/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கழிப்பிடம்அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கழிப்பிடம்அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கழிப்பிடம்அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கழிப்பிடம்அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கழிப்பிடம்அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்
ADDED : ஆக 25, 2011 02:03 AM
வாழப்பாடி:தமிழகம் முழுவதும், மாற்றுத்திறனாளிகள் எளிமையாக பயன்படுத்தும்
விதத்தில், அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும், நவீன பொதுக்கழிப்பிடம்
அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு அதிரடியாக
செயல்படுத்தியுள்ளது.தமிழகத்தில், ஓட்டுச்சாவடிகள் தோறும் மாற்றுத்
திறனாளிகளின் நலன் கருதி, சாய்வு நடைபாதை அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி,
மாற்றுத் திறனாளிகளுக்கு பஸ் மற்றும் ரயில் கட்டணங்களில் சலுகை
வழங்கப்பட்டு வருவதோடு, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு
நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.அவர்களுக்கு மேலும் ஒரு திட்டமாக,
தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கென அனைத்து குடியிருப்பு
பகுதிகளிலும், நவீன பொதுக்கழிப்பிடம் அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு
அதிரடியாக செயல்படுத்தியுள்ளது.முதற்கட்டமாக, தமிழகத்தில் செயல்பட்டு வரும்
பேரூராட்சிகள் தோறும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் நவீன
பொதுக்கழிப்பிடங்களுடன் இணைத்து, மாற்றுத் திறனாளிகள் எளிமையாக
பயன்படுத்தும் விதத்தில் கழிப்பிடங்களை அமைத்திட, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து
பேரூராட்சிகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன கழிப்பிடம் அமைப்பதற்கு
போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தகுதியான இடத்தை தேர்வு செய்து,
தரமான முறையில் கழிப்பிடம் அமைப்பதற்கு டெண்டர்
கோரப்பட்டுள்ளது.சமூகத்தில், மாற்றுத் திறனாளிகள் சம அந்தஸ்து மற்றும்
வசதிகளை பெரும் விதத்தில், தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வரும் தமிழக அரசு, பொதுமக்களிடம் பாராட்டுதலை பெற்று வருகிறது.


