Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மண்ணெண்ணெய் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்

மண்ணெண்ணெய் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்

மண்ணெண்ணெய் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்

மண்ணெண்ணெய் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்

ADDED : ஆக 19, 2011 03:59 AM


Google News
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே மண்ணெண்ணெய் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட ரேஷன் கடைகளுக்கு கடந்த 2 மாதமாக குறைவான அளவே பொருட்கள் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான அளவிற்கு பொருட்கள் வழங்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம். ஜி.ஆர்., சிலை அருகே உள்ள ரேஷன் கடைக்கு இந்த மாதம் குறைவான அளவு மண்ணெண்ணெய் வந்ததால் அனைவருக்கும் மண்ணெண்ணெய் வழங்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆணையாங்குப்பம், சம்மந்தம், நாகவள்ளியம்மன் கோயில், கொடிக்கால் நகர் பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கடலூரில் இருந்து சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பார்த்திபன் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த மாதம் வரும் மண்ணெண்ணெய் கண்டிப்பாக வழங்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us