Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/புதுச்சேரியை சேர்ந்தவர்திண்டிவனத்தில் மர்ம சாவு

புதுச்சேரியை சேர்ந்தவர்திண்டிவனத்தில் மர்ம சாவு

புதுச்சேரியை சேர்ந்தவர்திண்டிவனத்தில் மர்ம சாவு

புதுச்சேரியை சேர்ந்தவர்திண்டிவனத்தில் மர்ம சாவு

ADDED : ஆக 19, 2011 03:50 AM


Google News
திண்டிவனம்:புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு பஸ்சில் சென்றவர் திண்டிவனம் அருகே மர்மமாக இறந்து கிடந்தார்.புதுச்சேரி பிரியதர்ஷினி நகர் கண்டாக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேசன்,50.

இவர் கடந்த 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு திருப்பதிக்கு பஸ்சில் புறப்பட்டார். வழியில் திண்டிவனத்தில் பஸ்சிலிருந்து இறங்கி உள்ளார்.இவர் கடந்த 15ம் தேதி மாலை திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமம் நெய்குப்பி கிராஸ் ரோட்டில் உள்ள புளிய மரத்தடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது பற்றி பொதுமக்கள் ரோஷனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல்போன் நம்பருக்கும் தகவல் தெரிவித்தனர். அவரது மகன் தமிழ்ச்செல்வம்,24 என்பவர் நேரில் வந்து இறந்தது, தனது தந்தை வெங்கடேசன் என அடையாளம் காட்டினார்.இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us