/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வெளியிடங்களில் மதுபாட்டில் விற்பனை "பார்' போல மாறும் பெட்டிக்கடைகள்வெளியிடங்களில் மதுபாட்டில் விற்பனை "பார்' போல மாறும் பெட்டிக்கடைகள்
வெளியிடங்களில் மதுபாட்டில் விற்பனை "பார்' போல மாறும் பெட்டிக்கடைகள்
வெளியிடங்களில் மதுபாட்டில் விற்பனை "பார்' போல மாறும் பெட்டிக்கடைகள்
வெளியிடங்களில் மதுபாட்டில் விற்பனை "பார்' போல மாறும் பெட்டிக்கடைகள்
ADDED : ஆக 13, 2011 04:12 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் மது பாட்டில்கள், வெளியிடங்களில் விற்பனை சூடு பறக்கிறது.
கடைகளில் இல்லாத சரக்குகள் வெளி நபர்களிடம் கிடைக்கின்றன. கிராமங்களில் பெட்டிக்கடைகள் 'பார்' போல செயல்படுகின்றன.
மாவட்டத்தில் 164 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் 'பார்' நடத்த ஆளும்கட்சியினரிடம் கடும் போட்டி இருந்தது. இந்நிலையில் நகர், ஒன்றிய அளவில் பேசி முடிக்கப்பட்டு கட்சிக்காரர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 128 மதுக்கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மீதியுள்ள 34 கடைகளை யாரும் எடுக்கவில்லை. அதிகளவு பணம், விற்பனை குறைவு என்பதால் இந்த நிலை.
வெளி விற்பனை: இந்நிலையில் கிராமம், மலைப்பகுதி கடைகளில், சில மது ரகங்கள் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் இவை, வெளி இடங்களில் விற்கப்படுகிறது. விரும்பும் சரக்குக்கள் மதுக்கடைகளில் கிடைக்காததால், குடிமகன்கள் வெளி இடங்களை நாட வேண்டியுள்ளது. குறிப்பாக கோபால்பட்டி, செந்துரை, மணக்காட்டூர் உட்பட பல இடங்களில் இவ்விற்பனை அமோகம்.
இது குறித்து கூடுதல் எஸ்.பி., ராமமூர்த்தி கூறியது: வெளியிடங்களில் விற்பவர்கள், 'பார்' போல கடை நடத்துகின்றனர். இக்கடைகளில் குடிக்க அனுமதித்தாலும், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மாதம் மட்டும், வெளியிடங்களில் மது விற்றதாக 90 வழக்குகள் பதியப்பட்டுள்ளன, என்றார்.