Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பெண்களிடம் செயின் பறித்தால் "குண்டர்' சட்டம் பாயும்: கமிஷனர்

பெண்களிடம் செயின் பறித்தால் "குண்டர்' சட்டம் பாயும்: கமிஷனர்

பெண்களிடம் செயின் பறித்தால் "குண்டர்' சட்டம் பாயும்: கமிஷனர்

பெண்களிடம் செயின் பறித்தால் "குண்டர்' சட்டம் பாயும்: கமிஷனர்

ADDED : ஆக 08, 2011 02:46 AM


Google News
திருச்சி: 'பெண்களிடம் நகை, பணம் பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்' என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

திருச்சி கமிஷனர் மாசானமுத்து உத்தரவின் பேரில், துணை கமிஷனர் ராமையன் மேற்பார்வையில், பஸ் ஸ்டாண்டு செல்லும் பெண்களிடம் நகை, பணம் திருட்டு நடத்தை கண்டுபிடிக்க ஸ்ரீரங்கம் உதவிகமிஷனர் லலிதா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டதில், தஞ்சாவூர் புதுத்தெருவை சேர்ந்த செல்வி (என்ற) மீனாட்சி (45) என்வரை கைது செய்தனர். அவரிடமிருந்து எட்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீனாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல், நகை திருட்டில் ஈடுபட்டுள்ளவர் குறித்தும் மீனாட்சி தகவல் தந்துள்ளார். அப்பெண்களை பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 'மேலும், பெண்களிடம் தொடர்ந்து நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் 'குண்டர்' சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்' என மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து எச்சரித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us