புதிய தொழிற்கொள்கை விரைவில் உருவாக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
புதிய தொழிற்கொள்கை விரைவில் உருவாக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
புதிய தொழிற்கொள்கை விரைவில் உருவாக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை : புதிய தொழிற்கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய நில எடுப்புக் கொள்கை: கட்டாய நில எடுப்புச் சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதால், நிலங்களை ஒருங்கிணைத்து, அதன் பயனை அனைவரும் பகிர்வது போன்ற புதுமையான வழிமுறைகளை உள்ளடக்கி, புதிய நில எடுப்பு கொள்கை உருவாக்கப்படும். போதிய அளவு நில வங்கியை உருவாக்கி, தொழிற்பூங்காக்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென் மாவட்டங்களில் தொழில் துவங்க வசதியாக, மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையை, தற்சார்புடைய தொழில் வளர்ச்சி பெருவழி பாதையாக மாற்றப்படும். உற்பத்தி வர்த்தக முதலீட்டு பகுதி, விவசாய வர்த்தக முதலீட்டு பகுதி, அறிவுசார் மையம், சிறப்புச் சுற்றுலா முதலீட்டு மண்டலம் ஆகியவை அமைப்பதற்கு, இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.