Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள் குறித்து ஆலோசனை

சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள் குறித்து ஆலோசனை

சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள் குறித்து ஆலோசனை

சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள் குறித்து ஆலோசனை

ADDED : ஜூலை 27, 2011 12:55 AM


Google News

விழுப்புரம் : சமூக பாதுகாப்பு திட்டத்தில் விவசாய தொழிலாளர் நல வாரிய உதவிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மணிவண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட கண்காணிப்பாளர் சரவணன், சுகாதார துணை இயக்குனர்கள் கிருஷ்ணராஜ், கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்டத்தில் திருமண உதவி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவி, முதியோர் உதவித் தொகை, இயற்கை, விபத்து மரண உதவித் தொகை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 896 பேருக்கு முதியோர் உதவித் தொகையாக மாதம் 1000 ரூபாய் வீதம் 12.69 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.



இந்த தொகை முறையாக உரிய காலத்தில் கிடைக்க மனுக்களை சரியாக ஆய்வு செய்து தகுதியுள்ள வர்களுக்கு வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்காமல் இருந்தாலோ, நிதி பற்றாக்குறை இருந்தாலோ உயரதிகாரிகளிடம் கூறி தொகை பெற்று வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் மனுக்கள் நிலுவையில் இருந்தால் வரும் 10ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். நிலுவையில் இல்லாமல் உதவித் தொகையை வழங்க வேண்டும் என கலெக்டர் மணிமேகலை ஆலோசனை வழங்கினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us