பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நேற்று பகல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
அணைக்கு விநாடிக்கு 2,463.89 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,435.53 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் 68.79 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,383 கனஅடி நீர் வரத்துள்ளது. அணையிலிருந்து 53 கனஅடி நீர் வெளியேறுகிறது. வெளியேற்றத்தை விட வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் மூன்றடி நீர் மட்டுமே தேவையாக உள்ளது.ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் 103.10 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 434 கனஅடி வரத்தும், 141 கனஅடி வெளியேற்றமும் உள்ளது.திருமூர்த்தி அணையில் 60 அடி உயரத்தில் 34.05 அடி நீர்மட்டம் உள்ளது.
அமராவதி அணையின் 90 அடி உயரத்தில் 43.76 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 824 கன அடி நீர் வரத்தாகவும், 259 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது.நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) :சோலையாறு- 22, பரம்பிக்குளம்- 10, ஆழியாறு - 5, மேல்நீராறு- 34, கீழ்நீராறு- 17, வால்பாறை - 17, பொள்ளாச்சி - 10, மணக்கடவு - 12.7, நல்லாறு - 2, தூணக்கடவு- 17, பெருவாரிப்பள்ளம்- 14, சர்க்கார்பதி - 2, காடம்பாறை - 2.இயல்பு வாழ்க்கை பாதிப்பு