சமச்சீர் கல்வி: ஐகோர்ட் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு
சமச்சீர் கல்வி: ஐகோர்ட் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு
சமச்சீர் கல்வி: ஐகோர்ட் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு
UPDATED : ஜூலை 21, 2011 03:30 PM
ADDED : ஜூலை 21, 2011 03:07 PM
புதுடில்லி: சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமச்சீர் கல்வித்திட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் வரும் 2ம் தேதிக்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இவ்வழக்கின் இறுதி விசாரணை வரும் 26ம் தேதி நடக்கிறது.