/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/108 இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை மனு108 இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை மனு
108 இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை மனு
108 இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை மனு
108 இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை மனு
ADDED : ஜூலை 19, 2011 12:34 AM
விழுப்புரம் : சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மாவட்டத்தில் பணியாற்றும் 108 இலவச ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஜெயபிரகாஷ், ஆழ்வார், மருத்துவ உதவியாளர்கள் அன்பு, கிருபானந்தம் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் மணிமேகலையை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு சார்பில் இயக்கப்படும் 108 இலவச ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் அடிப்படை உரிமைகளை கேட்டால் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்ற அடக்கு முறை களை நீக்க வேண்டும். பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு தங்கும் இடம், கழிவறை மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு நிரந்தர இட வசதி செய்து தரவேண்டும். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மருத்துவக் காப்பீடு, ஊதிய உயர்வு, இலவச பஸ் பாஸ், விடுமுறை நாட்களில் பணி செய்தால் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.