/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரேஷன் கடையை பிரிக்க கோரி சோ.குப்பம் மக்கள் போராட்டம்ரேஷன் கடையை பிரிக்க கோரி சோ.குப்பம் மக்கள் போராட்டம்
ரேஷன் கடையை பிரிக்க கோரி சோ.குப்பம் மக்கள் போராட்டம்
ரேஷன் கடையை பிரிக்க கோரி சோ.குப்பம் மக்கள் போராட்டம்
ரேஷன் கடையை பிரிக்க கோரி சோ.குப்பம் மக்கள் போராட்டம்
ADDED : ஜூலை 19, 2011 12:14 AM
செஞ்சி : ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பொருட்களை வாங்காமல் போராட்டம் நடத்தினர்.செஞ்சி தாலுகா சோ.குப்பம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் சோ.குப்பம், வளையசெட்டி குளம், பெலாகுப்பம், கீழ்பெலாகுப்பம், புது காலனி, பழையகாலனி மற்றும் இருளர் காலனியை சேர்ந்த 1,097 குடும்ப அட்டை தாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த கடையில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. கூட்டம் அதிகமான இருக்கும் நாட்களில் மாலை வரை காத்திருந்தும் பொருட்களை வாங்க முடியாமல் வெறுங் கையுடன் திரும்புகின்றனர். அத்துடன் வரிசையில் நிற்பவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது.எனவே பெலாகுப்பம், கீழ்பெலாகுப்பம், புதிய காலனி, பழைய காலனி, வளையசெட்டி குளம் ஆகிய பகுதி மக்களுக்கு தனியாகவும், சோ.குப்பம் மற்றும் இருளர் காலனியை சேர்ந்தவர்களுக்கு தனியாகவும் ரேஷன் கடை வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடையை புதிதாக கட்டியுள்ள அரசு கட்டடத்திற்கு இம் மாதம் 1ம்தேதி மாற்றினர். இருந்தாலும் ரேஷன் கடை இரண்டாக பிரிக்கப்படவில்லை.
இப்பிரச்னை குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த 1ம் தேதி முதல் சோ.குப்பம், இருளர் காலனியை சேர்ந்த 417 அட்டை தாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.