/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கலெக்சனுக்கு அனுப்பிய "செக்' மாயம் வட்டியுடன் வழங்க கோர்ட் உத்ரவுகலெக்சனுக்கு அனுப்பிய "செக்' மாயம் வட்டியுடன் வழங்க கோர்ட் உத்ரவு
கலெக்சனுக்கு அனுப்பிய "செக்' மாயம் வட்டியுடன் வழங்க கோர்ட் உத்ரவு
கலெக்சனுக்கு அனுப்பிய "செக்' மாயம் வட்டியுடன் வழங்க கோர்ட் உத்ரவு
கலெக்சனுக்கு அனுப்பிய "செக்' மாயம் வட்டியுடன் வழங்க கோர்ட் உத்ரவு
ADDED : ஜூலை 14, 2011 11:46 PM
விருதுநகர் : கலெக்ஷனுக்கு அனுப்பிய 'செக் மாயமானதால் , வங்கி நிர்வாகம் பொறுப்பு ஏற்று, நஷ்ட ஈட்டுத்தொகை வழங்க வேண்டும், என , மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அ.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் விவசாயி ஆர்.எஸ்.ராஜன்.இவர் தனது நிலத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தை வியாபாரியிடம் 1.50 லட்சத்திற்கு விற்பனை செய்தார். இதற்கு 50 ஆயிரம் ரொக்கம், ஒரு லட்சத்திற்கு சிண்டிகேட் வங்கி 'ö கொடுத்துள்ளார். இதை கனரா வங்கியில் உள்ள தனது கணக்கில்ராஜன் கலெக்ஷனுக்கு போட்டுள்ளார். ராஜபாளையம் சிண்டிகேட் வங்கியில் வியாபாரியின் பெயரில் பணம் இல்லை என 'ö திருப்பி கனரா வங்கிக்கு அனுப்பப்பட்டது. திருப்பி அனுப்பப்பட்ட கெனரா வங்கி நிர்வாகம் ராஜனுக்கு தரவில்லை. கெ வங்கி நிர்வாகம் தொலைத்து விட்டது. ராஜனுக்கு ஒரு லட்சமும் கிடைக்கவில்லை, மேல் நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலிக்க கோர்ட்டுக்கும் செல்ல முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட நுகர்வோர் கோட்டில் ராஜன் வழக்கு தொடுத்தார். விசாரணை செய்த நீதிபதி தொய்வராஜ், உறுப்பினர்கள் பெருமாள்சாமி, தமிழ்செல்வி ஆகியோர்,' வங்கியின் சேவை குறைபாட்டுக்காக, வங்கி நிர்வாகம் ராஜனுக்கு 10 ஆயிரம் முன் பணத்தை ஆறு சதவீத வட்டியுடன் வழங்குமாறு,' தீர்ப்பு வழங்கினர்.