ADDED : ஆக 11, 2011 04:47 AM
குன்னூர்:'உணர்வுப்பூர்வமான சமுதாய சேவையில் மாணவிகள் ஈடுபட வேண்டும்,' என கல்லூரி நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் பசுமைப்படை திட்டம்
துவங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர். ஷீலா தலைமை வகித்தார். திட்ட
அமைப்பாளர் பேராசிரியை. சுஜாதா வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற
தமிழக பசுமை இயக்க மாநில பொது செயலர் டாக்டர்.ஜீவானந்தம் பேசுகையில்,
''சேவையை உணர்வுபூர்வமாக செய்து முடிக்க வேண்டும். மனதில் அன்பு என்ற பசுமை
குடி கொண்டால் தான் சுற்றுப்புறத்தை பசுமையாக வைக்க முடியும்.
சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக் கேட்க மாணவிகள் தயங்க
கூடாது,'' என்றார். ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவன தாளாளர் சிவானந்தன்
பேசினார். மாணவிகளுக்கு கருவேப்பிலை நாற்றுகள் வழங்கப்பட்டன. அவற்றை மகளிர்
குழுக்கள், அறக்கட்டளை, தன்னார் தொண்டு அமைப்பினருக்கு வழங்க
முடிவெடுக்கப்பட்டது. காசநோய், எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி
பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி லிப்னா ஜாய் நன்றி
கூறினார்.