/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பைக், லாரி மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலிபைக், லாரி மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலி
பைக், லாரி மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலி
பைக், லாரி மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலி
பைக், லாரி மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலி
ADDED : செப் 09, 2011 12:53 AM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பைக்கும், லாரியும் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி கீழசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன்(42). இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி காமராஜ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிம்பர் லாரியும், பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முருகன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகராட்சி அலட்சியம் : தூத்துக்குடி நகரப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் காரணமாகும். உதாரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ரோட்டின் பக்கவாட்டில் மண் அள்ளப்படாமல் மாதக் கணக்கில் கிடக்கிறது. இதுபோன்று குறைபாடுகளை நீக்க மாநகராட்சி நிர்வாகம் மண்ணை அள்ளுவதற்கு உத்திரவிடுவதில்லை. இதனால் ரோட்டின் வழியாக வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்லும் போது டூவீலரில் செல்வோர் ரோட்டின் பக்கவாட்டில் செல்ல வேண்டியநிலை ஏற்படுகிறது. இதனால் அங்கு அள்ளப்படாமல் குவிந்து கிடக்கும் மணல்களால் பைக்குகள் சரிந்து விழுகிறது. இவ்வாறு ஏற்படும் விபத்துக்களால் பலத்த காயமும், உயிர் சேதமும் ஏற்படுகிறது.