Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவன் பலி

டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவன் பலி

டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவன் பலி

டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவன் பலி

ADDED : ஆக 23, 2011 11:44 PM


Google News
தாம்பரம்:தாம்பரம் அருகே, ஏரி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது கவிழ்ந்தது. இதில், ஒரு மாணவன் மண்ணில் சிக்கி, பரிதாபமாக இறந்தான். இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பதுவஞ்சேரி, ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். தனியார் காப்பகத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி சரிதா.வாய் பேச முடியாதவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்.

இரண்டாவது மகன் ரூபன்,7 . திருவஞ்சேரி அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை 8.30 மணிக்கு ரூபன், அதே தெருவைச் சேர்ந்த சபரி உள்ளிட்ட சில மாணவர்கள், வீட்டில் இருந்து அகரம்தென் மெயின் ரோடு வழியாக பள்ளிக்கு நடந்து சென்றனர்.கஸ்பாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, மாம்பாக்கத்தில் இருந்து, ஏரி மண் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, அகரம்தென் சாலையில் இருந்து திரும்பியது. அப்போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதைப் பார்த்ததும், மாணவர்கள் ஆளுக்கொரு பக்கம் ஓடினர். இதில், ரூபன் மட்டும் லாரி மண்ணில் சிக்கிக் கொண்டான்.அப்பகுதி மக்கள், மண்ணில் சிக்கிக் கொண்ட ரூபனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், முடியவில்லை. இதற்கிடையில், மாணவன் லாரி மண்ணில் சிக்கிக் கொண்ட தகவல் பரவியதால், நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். பின், ஒரு மணி நேரம் போராடி, பொக்லைன் மூலம் மண்ணை அகற்றி, ரூபனை வெளியே எடுத்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரூபனை , குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்தில், லாரி டிரைவர் ராஜன், கிளீனர் சார்லஸ் ஆகியோரும் காயமடைந்தனர். இருவரும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us