பெருந்துறை போலீஸ் மீது விவசாயி புகார்
பெருந்துறை போலீஸ் மீது விவசாயி புகார்
பெருந்துறை போலீஸ் மீது விவசாயி புகார்
ADDED : ஜூலை 27, 2011 01:20 AM
ஈரோடு: பெருந்துறை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, விவசாயி ஒருவர் ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளார்.
பெருந்துறை ஓலப்பாளையம் அருகே கனகப்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி, ஈரோடு எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 21ம் தேதி எங்கள் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர், இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த மரத்தை வெட்ட வந்தார். இதை தட்டிக் கேட்டதற்கு ஆயுதங்களுடன் எங்களை தாக்க வந்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த போது, புகாரை வாங்காமல் எஸ்.ஐ., ரவி காக்க வைத்தார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் குணசேகரன், டி.எஸ்.பி., குணசேகரன் ஆகியோர் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். முறையான நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.