நில மோசடி வழக்கு அதிகாரிகளுக்கு "கிலி' ஜெ., அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
நில மோசடி வழக்கு அதிகாரிகளுக்கு "கிலி' ஜெ., அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
நில மோசடி வழக்கு அதிகாரிகளுக்கு "கிலி' ஜெ., அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2011 11:08 PM
ராமநாதபுரம்:''தமிழகத்தில் நில மோசடி வழக்கில் பாரபட்சமின்றி விசாரணை
மேற்கொள்ளப்படும்,'' என, தமிழக முதல்வர் ஜெ., அறிவித்ததை தொடர்ந்து,
பத்திரப்பதிவு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மத்தியில், 'கிலி'
ஏற்பட்டுள்ளது.சென்னையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பேட்டியின் போது, நில
மோசடி வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பத்திரப் பதிவு, வருவாய்த்துறை,
போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, ''யார் தவறு
செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்'' என,
கூறியிருந்தார்.இதனால், முந்தைய ஆட்சியில் போலி பதிவுக்கு உதவிய
பத்திரப்பதிவு அதிகாரிகள், போலி ஆவணங்கள் வழங்கிய வருவாய்த்துறை
அதிகாரிகள், இது தொடர்பாக புகார் கொடுக்க சென்றபோது வாங்க மறுத்த போலீசார்
என பலருக்கும் தற்போது, 'கிலி' ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் புகார்கள் குவிந்து 'முன்னாள்
அமைச்சர் கைது' என, பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவதை கண்ட மக்கள்,
தற்போது அதிகாரிகள் மீதும் அச்சமின்றி புகார் தெரிவிக்க தயாராகி
விட்டனர்.அதிகார பலத்தை பயன்படுத்தி, முந்தைய ஆட்சியில் அப்போதைய
அமைச்சர்களுக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள், போலீசார் மீது வரும்
புகார்களையும் தடையின்றி விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால்,
அபகரிக்கப்பட்ட நிலம் மீண்டும் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் மக்கள்
உள்ளனர்.