ADDED : ஆக 13, 2011 04:12 AM
திண்டுக்கல் : ஆத்தூர் அருகே சீவல்சரகை சேர்ந்தவர் தொட்டிச்சி (28).
இவருக்கும் புங்கனம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 10 பவுன் நகை கொடுத்தனர். மேலும் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தினார். இதற்கு உடந்தையாக உறவினர்கள் குணசேகரன் (60), கருப்பையா (48), பூரணம் (30) இருந்தனர். இது குறித்து தொட்டிச்சி, மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.