ADDED : ஆக 11, 2011 04:08 AM
கடலூர்:டிராக்டர் மோதி மோட்டார் பைக்கில் சென்றவர் இறந்தார்.ராமந்ததம்
அடுத்த மலையனூரைச் சேர்ந்தவர்கள் மணிமாறன், 36, செந்தில்குமார், 25.
இருவரும் ஆக்கனூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் 21ம்
ஆண்டு நிறைவு விழா பத்திரிக்கை அடிப்பதற்காக தொழுதூருக்கு மோட்டார்
பைக்கில் சென்றனர்.
ராமநத்தம் கூட்டுரோடு அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர், மோட்டார்
பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மணிமாறன் அதே இடத்தில் இறந்தார்.
செந்தில்குமார் காயமடைந்தார்.