ADDED : ஆக 05, 2011 07:04 PM
சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை சேகரிக்கும் கிடங்குகளை, ஹெலிகாப்டரில் சென்றபடி, முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார்.
சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அவற்றை முறையாக அகற்றுவதையும், ஒரு மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக நடத்த, தமிழக அரசின் பட்ஜெட்டில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றி, சென்னை மாநகரையே ஒரு தூய்மைப் பகுதியாக்கும் வழிவகைகளைக் கண்டறிய, முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் சென்றார். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும், சென்னை மாநகரின் குப்பை சேகரிப்பு கிடங்குகளையும் முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ததாக, தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.