பா.ஜ., தமிழக தலைவர் பொன்.
மாற்றுத் திறனாளிகள் துறை அமைச்சர் ராமஜெயம் பேச்சு: மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. துறை அதிகாரிகள் அவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அங்கீகரிக்க வேண்டும். புறக்கணிக்கக் கூடாது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு : தேர்தல் செலவு என்ற பெயரில் கறுப்புப் பணப் புழக்கம் அதிகமாகிவிட்டது. பென்னாகரம் இடைத்தேர்தலில், 75 கோடி ரூபாய் வரை செலவு செய்தனர். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது?
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: அ.தி.மு.க.,வும் சரி, தி.மு.க.,வும் சரி நம் செல்வாக்கை அறுவடை செய்யத்தான் தயாராக உள்ளன. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் இவ்விரு கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை.
பா.ம.க., தலைவர் மணி பேட்டி: சமச்சீர் கல்வியை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். இதற்கு மேலும் கால நீடிப்பு செய்யக் கூடாது. ஏற்கனவே இரண்டு மாத காலம் மாணவர்கள் பாடப் புத்தகங்கள் இல்லாமல் படிக்க முடியாமல், காலம் வீணாகிவிட்டது. இனியும், அரசு இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்கக் கூடாது.
கொ.மு.க., பொதுச் செயலர் ஈஸ்வரன் பேட்டி: சட்டசபைத் தேர்தலில் தோல்வி என்பது, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதை காட்டுகிறது. கொ.மு.க., தேர்தலுக்காக துவங்கப்பட்டது அல்ல. அதனால் தான் தேர்தலில் தோல்வி அடைந்ததைப் பற்றி வருத்தப்படவில்லை.
ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: தி.மு.க., தற்போது காணாமல் போய் வருகிறது. அதேபோல், அ.தி.மு.க.,வும் விரைவில் காணாமல் போகும். தி.மு.க., - அ.தி.மு.க., தொண்டர்கள் ம.தி.மு.க., வுடன் கை கோர்க்கும் காலம் விரைவில் வரும்.
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேட்டி: தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக மக்கள், தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர். எனினும், இந்த எதிர்ப்பை முழுமையானதாகக் கருத முடியாது. 2014ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரசை தமிழக மக்கள் தோற்கடித்தால் தான் முழு வெற்றியாகும்.