சாராய விற்பனைக்கு ஏலம் விட முயற்சி : ஊராட்சி தலைவர் உட்பட 15 பேர் கைது
சாராய விற்பனைக்கு ஏலம் விட முயற்சி : ஊராட்சி தலைவர் உட்பட 15 பேர் கைது
சாராய விற்பனைக்கு ஏலம் விட முயற்சி : ஊராட்சி தலைவர் உட்பட 15 பேர் கைது
ADDED : ஜூலை 25, 2011 12:24 AM
மரக்காணம் : மரக்காணம் அருகே, சாராய ஏலம் விட முயன்ற ஊராட்சித் தலைவர்
உட்பட, 15 பேரை, போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்
அடுத்த கீழ்பேட்டை கிராமத்தில், நேற்று காலை 9 மணிக்கு, ஊராட்சித் தலைவர்
மற்றும் நாட்டாமைக்காரர்கள் தலைமையில் கிராம பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், சாராய ஏலம் விடுவதாக விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு
ரகசிய தகவல் கிடைத்தது. கோட்டகுப்பம் டி.எஸ்.பி., சிவனேசன், திண்டிவனம்
மதுவிலக்கு டி.எஸ்.பி., ஜெயராஜ் மற்றும் போலீசார், கீழ்பேட்டைக்கு
விரைந்தனர். ஊராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி, நாட்டாமைக்காரர்கள் உட்பட, 15
பேரை, கைது செய்து விசாரித்தனர். கோவில் திருவிழா நடத்த சாராய விற்பனைக்கு
ஏலம் விடமுயன்றது தெரிந்தது. கீழ்பேட்டையில் இனி சாராய விற்பனை ஏலம்
விடமாட்டோம், சாராயம் விற்பனை செய்யமாட்டோம் என, பஞ்சாயத்தார்கள் எழுத்துப்
பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை
செய்யப்பட்டனர்.