பூதப்பாண்டி கோர்ட்டிற்கு வழக்குகள் மாற்றம்அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
பூதப்பாண்டி கோர்ட்டிற்கு வழக்குகள் மாற்றம்அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
பூதப்பாண்டி கோர்ட்டிற்கு வழக்குகள் மாற்றம்அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
ADDED : ஆக 12, 2011 02:57 AM
மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட்
கோர்ட்டிற்கு வழக்குகளை மாற்றிய உத்தரவுக்கு தடை கோரிய மனு மீது சட்டத்துறை
செயலர், ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல், கலெக்டர் பதிலளிக்க, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.நாகர்கோவில் வக்கீல் சங்க செயலாளர் ஆறுமுகம் தாக்கல் செய்த
மனு: பூதப்பாண்டியில் மாஜிஸ்திரேட் கோர்ட் உள்ளது.
இது மாவட்ட முன்சீப்
மற்றும் மாஜிஸ்திரேட் கோர்ட் ஆக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில்
முன்சீப் கோர்ட் எல்லைக்குள் ஆரல்வாய்மொழி, தோவாலை, பூதப்பாண்டி,
இரச்சிகுளம், செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம், ஈசாந்திமங்கலம், சிரமரம்,
கடிக்காரன்கோனம், அழகியபாண்டிபுரம், தரிசனகோப், அருமநல்லூர் உட்பட 13
கிராமங்கள் வருகின்றன.நாகர்கோவில் முன்சீப் கோர்ட் விசாரித்த 13
கிராமங்களின் வழக்குகளின் கோப்புகளை, பூதப்பாண்டி முன்சீப் கோர்ட்டிற்கு
மாற்றும்படி கடந்த ஜூன் 2ம் தேதி அரசு உத்தரவிட்டது. கோர்ட் எல்லைகள்
வரையறுக்கும் போது மக்கள் பிரதிநிதிகள், கலெக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
அந்த விதிகள் பின்பற்றப்படவில்லை. அரசு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,
என கோரினார்.மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச் முன்
விசாரணைக்கு வந்தது. மனு குறித்து பதிலளிக்க சட்டத்துறை செயலர், ஐகோர்ட்
பதிவாளர் ஜெனரல், கன்னியாகுமரி கலெக்டர் ஆகியோருக்கு பெஞ்ச் உத்தரவிட்டது.


