/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு: தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது புகார்ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு: தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது புகார்
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு: தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது புகார்
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு: தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது புகார்
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு: தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது புகார்
ADDED : ஆக 28, 2011 12:29 AM
குறிச்சி : தொண்டாமுத்தூர், பார்பர் காலனியில், ரிசர்வ் சைட்டினை ஆக்கிரமித்துள்ள, தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் உள்ளது பார்பர் காலனி.
கடந்த 1982ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், ஒருவருக்கு மூன்று சென்ட் வீதம், இலவசமாக வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 34 சைட்டில், சவரத் தொழிலாளர்களுக்கு 22, போயர்களுக்கு எட்டு, சலவைத்தொழிலாளர்களுக்கு நான்கு சைட்டும் ஒதுக்கப்பட்டன.ரிசர்வ் சைட்டாக, ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் நிலம் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள இடத்தில், விளையாட்டு மைதானம், வணிக கட்டடம் கட்டவும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், இங்கு வசிக்கும் நாச்சிமுத்து என்பவர், தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, கவுன்சிலரானார். கவுன்சிலரான சில மாதங்களில், ரிசர்வ் சைட் உள்ளிட்ட இடங்களை, நாச்சிமுத்துவும், அவரது சகோதரர் பழனிசாமியும் ஆக்கிரமித்தனர்; கோவில் கட்டி, தங்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இப்பகுதி மக்கள் கடந்த வாரம் அமைச்சர் வேலுமணியிடம் மனு கொடுத்தனர்; மனு மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் பரிந்துரைத்தார். மனுவைப் பெற்ற கலெக்டர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளிடம், உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.


