/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கற்பித்தல் முறைகளில் மாற்றம்: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கற்பித்தல் முறைகளில் மாற்றம்: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கற்பித்தல் முறைகளில் மாற்றம்: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கற்பித்தல் முறைகளில் மாற்றம்: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கற்பித்தல் முறைகளில் மாற்றம்: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 05, 2011 11:54 PM
ஓசூர்: ''கால மாற்றத்திற்கு ஏற்ப, ஆசிரியர்கள் புதிய கற்பித்தல் முறையை பின்பற்ற வேண்டும், '' என அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் தெரிவித்தார்.
ஓசூர் கல்வி மாவட்ட பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மனோகரன் தலைமை வகித்தார். ஓசூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பிரேமானந்த், பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக் கூறி பேசியதாவது: ஆசிரியர்கள், வருங்கால இந்தியாவிற்கு தேவையான சிறந்த மாணவர்களை உருவாக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்ப, மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வகுப்பறையில் பயன்படக்கூடிய, புதிய தொழில் முறையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். இன்டர் நெட், எல்.சி.டி., புரொஜக்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன முறைகளை பயன்படுத்தி, ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். சிறந்த இந்தியாவை உருவாக்க, ஆசிரியர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சியை ஆசிரியர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன் துறையில், ஆசிரியர்கள் ஆண்டுதோறும் தங்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அனைவருக்கும் உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், ஓசூர் வட்டார வளமைய மேற்பார்வையர் சம்பத், தளி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பா, கெலமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கெம்பண்ணா மற்றும் ஒய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.