3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்
3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்
3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்

சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அளித்த அறிக்கை:முன்னாள் பிரதமர் ராஜிவ், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது, படுகொலை செய்யப்பட்டார்.
அமைச்சரவையின் அறிவுரைப்படி கவர்னரால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின் ஜனாதிபதியாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எவ்வித அதிகாரமும், முதல்வராகிய எனக்கு இல்லை. எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை, அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம்.இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சி வயப்பட்டு இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.