/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பொலிவிழந்த நாமக்கல் நகராட்சி செயற்கை நீருற்று, சிக்னல் அகற்றம்பொலிவிழந்த நாமக்கல் நகராட்சி செயற்கை நீருற்று, சிக்னல் அகற்றம்
பொலிவிழந்த நாமக்கல் நகராட்சி செயற்கை நீருற்று, சிக்னல் அகற்றம்
பொலிவிழந்த நாமக்கல் நகராட்சி செயற்கை நீருற்று, சிக்னல் அகற்றம்
பொலிவிழந்த நாமக்கல் நகராட்சி செயற்கை நீருற்று, சிக்னல் அகற்றம்
ADDED : ஆக 11, 2011 03:49 AM
நாமக்கல் : நாமக்கல் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு, பரமத்தி சாலை உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை நீருற்று மற்றும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வைக்கப்பட்ட தானியங்கி சிக்னல் அகற்றப்பட்டதால், நகரம் பொலிவிழந்துள்ளதுடன், விபத்து அபாயமும் நிலவி வருகிறது.நாமக்கல் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு, சேலம் ரோடு, பரமத்தி சாலை உள்ளிட்ட இடங்களில், நாள் முழுவதும் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
இச்சாலையில் தானியங்கி சிக்கனல் உள்ளிட்டவை எதுவும் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தது.அதை தவிர்க்கும் வகையில், சேலம் சாலையில் குறிப்பிட்ட இடங்களில் எச்சரிக்கை சிக்னல், பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு, பரமத்தி சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. தவிர, மணிக்கூண்டு, மோகனூர் சாலை, பரமத்தி சாலையில் ரவுண்டானா கட்டப்பட்டது.அதில், தனியார் நிறுவனம் ஒன்று செயற்கை நீரூற்று, வண்ண மின் விளக்கு, புற்கள் மற்றும் செடிகள் வைத்து அழகுபடுத்தியது. இரவு நேரங்களில் அம்மின் விளக்குகள் நகருக்கு அழகு சேர்த்தது. அதுபோல், சேலம் சாலையில் உள்ள சென்டர் மீடியனில் இடையிடையே வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை சிக்னல்களாலும் இரவு நேரங்களில் நடக்கும் சாலை விபத்துகளும் தவிர்க்கப்பட்டு வந்தன.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் எச்சரிக்கை சிக்னல் மற்றும் மணிக் கூண்டு, பரமத்தி சாலையில் இருந்த செயற்கை நீருற்று உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டது. அதனால், நகரம் பொலிவிழந்து காணப்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.