ADDED : அக் 14, 2011 01:40 AM
திருக்கோவிலூர் : மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி இறந்தார்.திருக்கோவிலூர்
அடுத்த வடகரைத்தாழனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சங்கர், 30.
அரகண்டநல்லூர் அடுத்த அந்திலி கிராமத்தில் நேற்று முன்தினம் காலை வீடு
கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம்
தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


