Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாலிபருக்கு கத்திக்குத்து பொதுமக்கள் சாலை மறியல்

வாலிபருக்கு கத்திக்குத்து பொதுமக்கள் சாலை மறியல்

வாலிபருக்கு கத்திக்குத்து பொதுமக்கள் சாலை மறியல்

வாலிபருக்கு கத்திக்குத்து பொதுமக்கள் சாலை மறியல்

ADDED : செப் 06, 2011 01:26 AM


Google News
வாழப்பாடி: வாழப்பாடி அருகே வாலிபரை கத்தியால் குத்தியவர்களை கைது செய்யக்கோரி, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பெருமாபாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சந்திரன்(27). அவருக்கும் பெருமாபாளையம் வன்னியர் தெரு பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன், தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் சந்திரனை வழிமறித்த சிலர், அவரை கத்தியால் குத்தியுள்ளனர். அதுகுறித்த தகவலறிந்த அப்பகுதி மக்கள், வாலிபரை கத்தியால் குத்திய கும்பலை சேர்ந்த ஒருவரை சுற்றி வளைத்து பிடித்து தாக்கியுள்ளனர். வாலிபரை கத்தியால் குத்தியவர்களை கைது செய்யக் கோரி, பெருமாபாளையம் 3வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் மேட்டுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அதனால், சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி., ராஜன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., வேதபிறவி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us