/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ஆற்றில் தவறி விழுந்து மாணவியர் இருவர் பலிஆற்றில் தவறி விழுந்து மாணவியர் இருவர் பலி
ஆற்றில் தவறி விழுந்து மாணவியர் இருவர் பலி
ஆற்றில் தவறி விழுந்து மாணவியர் இருவர் பலி
ஆற்றில் தவறி விழுந்து மாணவியர் இருவர் பலி
ADDED : ஆக 19, 2011 11:09 PM
மன்னார்குடி: மன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த இரு பள்ளி மாணவியரின்
உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி
அருகே வடபாதிமங்கலம் அருகே அரிசந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி
மகள் கலைவாணி (5). ஒன்றாம் வகுப்பு மாணவி. அதே ஊரை சேர்ந்தவர் தயாளன் மகள்
வாசுகி (10). ஐந்தாம் வகுப்பு மாணவி. இருவரும் அதேபகுதியில் உள்ள
வெண்ணாற்றில் நேற்று மதியம் 1 மணியளவில் கால் கழுவச் சென்றனர். அப்போது
இருவரும் ஆற்றில் தவறி விழுந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையறிந்த அப்பகுதி வாலிபர்கள், கோட்டூர், கூத்தாநல்லூர் தீயணைப்பு
வீரர்கள் மற்றும் போலீஸார் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் டி.எஸ்.பி., ராஜேந்திரன் உத்தரவின் பேரில் வடபாதிமங்கலம்
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


