ADDED : ஆக 14, 2011 04:30 PM

ரோட்டோரங்களில் குப்பைகளை எரிப்பதாலும், செங்கல் சூளைகளில் விறகுகளை எரிப்பதாலும் புகை ஏற்படுகிறது.
இவற்றால் வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். புகை நமக்கு பகை என அவர்கள் புலம்புகின்றனர். ரோட்டோரம் ஏற்படும் புகையால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் புகையில் சிக்கி அக்கரைக்கு செல்வதற்குள் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. தேனி மாவட்டத்தில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும்தேனி-பெரியகுளம் ரோடு, கம்பம்-கூடலூர் ரோடு, தேனி-கொடுவிலார்பட்டி ரோடு உட்பட பல ரோடுகளில் ரோட்டோரங்களில் அதிகளவில் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்து வெளியாகும் புகையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்தில் சிக்கி உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்துக்கள் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.